தடைகளை தாண்டி வெளியானது ‘குயின்’ வெப் சீரிஸ்! 11 பகுதிகள் ஒரே நேரத்தில் ரிலீஸ்!

- ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் வெப் சீரிஸ் இன்று வெளியாகியுள்ளது.
- இதில் ரம்யா கிருஷ்ணன், இந்திரஜித், அஞ்சனா ஜெய பிரகாஷ், அனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் வெப் சீரிஸ் இன்று MX பிளேயரில் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸை கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் என இருவர் இயக்கியுள்ளார்.
இந்த வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்னன் முதன்மை கதாபாத்திரத்திலும், இந்திரஜித் முக்கியகதாபாத்திரத்திலும், அனிகா, அஞ்சனா ஜெயபிரகாஷ் ஆகியோர் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் கதாபாத்திரத்தின் இளம் வயது கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இந்த வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படவில்லை என வெப் சீரிஸ் குழு கூறினாலும், இந்த படம் ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என கூறி வெளியிட கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டிருந்தன. அப்படி பல தடைகளை தாண்டி இந்த வெப் சீரிஸ் இன்று MX பிளேயரில் வெளியாகிவிட்டது. மொத்தம் 11 பகுதிகள் வெளியாகியுள்ளது. அதில் ஒவ்வொரு பகுதியும் சுமார் 50 நிமிடம் ஓடும் அளவிற்கு இருக்கிறது.