மாஸ்டர் திரைப்படத்தை விலைக்கு வாங்கியதா ஓடிடி நிறுவனமான “நெட்ஃபிளிக்ஸ்”.?
விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தினை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன்,சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.
தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படத்தின் டீசர் சன் தொலைக்காட்சியின் யூடுயூப் சேனலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன் , இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற சாதனையையும் படைத்தது.ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த மாஸ்டர் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.சமீபத்தில் படத்தினை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,அதனை மாஸ்டர் படக்குழு மறுத்தது .இந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கியதை தொடர்ந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த சில படங்கள் தியேட்டரில் வெளியாகியது.
ஆனால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.இந்த நிலையில் தற்போது மீண்டும் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதாவது மாஸ்டர் படத்தினை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து மாஸ்டர் தயாரிப்பாளரிடம் கேட்ட போது , மாஸ்டர் படத்தினை திரையரங்குகளில் வெளியிட வேண்டுமா அல்லது ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டுமா என்பது இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் தளபதிக்கு மாஸ்டர் படத்தினை ரசிகர்கள் தியேட்டரில் கண்டு ரசிக்க வேண்டும் என்பது தான் ஆசை .எனவே மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.