#Breaking : ஒத்த செருப்பு சைஸ்-7, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது – மத்திய அரசு அறிவிப்பு!

“ஒத்த செருப்பு” மற்றும் ஹவுஸ் ஓனர் திரைப்படங்களுக்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ்-7. இந்த திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி தயாரித்து இருந்தார். மேலும் அவர் மட்டுமே இப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ” ஹவுஸ் ஓனர் ” திரைப்படத்தை இயக்கினார்.இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் ஏற்கனவே அரகோணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மனி என மூன்று படங்களை இயக்கி உள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன் இயக்கி, நடித்த “ஒத்த செருப்பு சைஸ்-7” , லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் ஆகிய தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025