#Oscars2022: யார் யாருக்கு எந்தெந்த விருது.? முழு விவரம் இதோ.!

Default Image

சினிமாவில் மிக உயரிய விருதாக “ஆஸ்கர்” விருது மதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விருது நிகழ்ச்சியில் பல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், என பலர் பங்கேற்று தனக்கான விருதுகளை பெற்று, நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில், யார் யார் எந்தெந்த முக்கிய விருதுகளை பெற்றுள்ளார்கள் என்பதற்கான விவரத்தை பார்ப்போம்.

OSCARS2022:

சிறந்த நடிகர் – ரிச்சர்ட் எனும் படத்திற்காக வில் ஸ்மித்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை – தி ஐஸ் ஆப் டாமி ஃபே (The Eyes of Tammy Faye) எனும் படத்திற்காக ஜெசிகா சட்ஸ்டைன்- க்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த இயக்குனர் – தி பவர் அப் தி டாக் எனும் படத்திற்காகஜேன் காம்பின் (Jane campion ) எனும் பெண் இயக்குனர் இந்த விருதை வாங்கியுள்ளார்.

சிறந்த படம் – கோடா (CODA)

சிறந்த திரைக்கதை – பெல்பாஸ்ட் (BELFAST)

சிறந்த தழுவல் திரைக்கதை – கோடா (CODA)

ரசிகர்கள் தேர்ந்தெடுத்த திரைப்படம் – ஆர்மி ஆப் தி டெட் ( ARMY OF THE DEAD)

சிறந்த  அனிமேட்டட் திரைப்படம் – என்கண்டோ (ENCANTO )

சிறந்த சர்வதேச திரைப்படம் – டிரைவ் மை கார் (DRIVE MY CAR )

சிறந்த துணை நடிகர்  – டிராய் கோட்சூர், கோடா (CODA ) திரைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகை –  அரியானா டி போஸ் (ArianaDeBose ) வேஸ்ட் சைடு ஸ்டோரி (WestSideStory) எனும் திரைப்படத்திற்காக வாங்கினார்.

டியூன் (DUNE ) திரைப்படம் மொத்தமாக 6 ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்றுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விசுவல் எபெக்ட் , சிறந்த எடிட்டிங் ,  சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த சவுண்ட், சிறந்த ப்ரொடெக்சன் டிசைன் என 6 விருதுகளை தட்டி சென்றுள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்பு – க்ருயெல்லா (CRUELLAA) திரைப்படம் .

சிறந்த மேக்கப் – தி ஐஸ் ஆப் டாமி ஃபே (The Eyes of Tammy Faye) எனும் திரைப்படம் விருதை பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்