அமராவதி அணையிலிருந்து வரும் ஜனவரி 3ம் தேதி முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் நீர் பாசனத்திற்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறந்து விட கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் கோரிக்கை ஏற்று கொண்ட முதல்வர், அமராவதி அணையிலிருந்து வரும் ஜனவரி 3ம் தேதி முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அமராவதி அணையிலுள்ள நீர் இருப்பு மற்றும் வரவினை கருத்தில் கொண்டு ஜனவரி 3ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தகுந்த இடைவெளி விட்டு விவசாயிகளின் நீர் பாசனத்திற்காக நீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். திறந்து விடப்படும் இந்த நீர் மூலம் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…