முடியின் அழகை பராமரிக்க உதவும் ஆரஞ்சு …, பயன்படுத்தும் முறை அறியலாம் வாருங்கள்..!

Default Image

ஆரஞ்சு பழம் உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்  காணப்படுகிறது. உடலில் வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது மட்டுமல்லாமல் நமது உடல் அழகுக்கும் எப்படி பயன்படுத்துவது, ஆரஞ்சு பழ தோல் வைத்து எப்படி எண்ணெய் தயாரிப்பது, ஆரஞ்சு தோல் ஹேர் மாஸ்க், கண்டிஷனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஆரஞ்சு எண்ணெய்

ஆரஞ்சு பழங்கள் இரண்டை எடுத்து அதனை நன்றாக பிழிந்துவிட்டு அதன் தோலை பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த தோலை அரைத்து தூள் செய்து கொள்ளவும். அதன் பின்பு ஆரஞ்சு தோலுடன் ஆரஞ்சு பழத்தின் சாறு பாதி அளவு சேர்த்துக் கொள்ளவும். மேலும் இதில் ஒரு பங்கு தேங்காய் எண்ணெய் அல்லது உங்களுக்கு விருப்பமான ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

இவை மூன்றையும் நன்றாக கலந்து இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த கலவையை வெளியில் காய வைத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக இந்த எண்ணையை எடுத்து நமது தலையில் எண்ணெய் போல பயன்படுத்தலாம். இது உங்கள் முடியை நல்ல பளபளப்பாக வைத்திருக்க உதவுவதுடன்,  வேர்ப்பகுதிக்கு ஊட்டம் அளித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.

ஆரஞ்சு ஹேர் பேக்

ஆரஞ்சு பழத்தை வைத்து முடிக்கு ஹேர் பேக் செய்து உபயோகிப்பதால் தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. ஆரஞ்சுப் பழத் தோலை நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் முட்டை மற்றும் ஆப்பிள் அல்லது அவகேடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கெட்டியாக எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்பு இதை முடியில் தடவி 15 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து தலைமுடியை கழுவினால் மென்மையான பளபளப்பான முடி கிடைக்கும்.

ஆரஞ்சு முடி கண்டிஷனர்

aloevera

ஆரஞ்சு பழத்தில் இருந்து சாறு எடுத்து, அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் இவை இரண்டையும் நன்கு கலந்து தலைக்கு குளிக்கும் பொழுது, ஷாம்பு வைப்பதற்கு முன் இதனை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முடி பளபளப்பாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்