நாளையுடன் முடிவடைகிறது காலக்கேடுவை.. டிக்டாக் செயலியை “ஆரக்கல்” நிறுவனம் வாங்கவுள்ளதா?
டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பதற்கான காலக்கடுவை நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், டிக்டாக்கை அமெரிக்க நிறுவனமான “ஆரக்கல்” வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார்.
இந்நிலையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்ய நிறைவேற்றப்பட்ட ஆணையில் கையெழுத்திடுவதாக அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் தெரிவித்துள்ளார். மேலும், டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் விற்காவிட்டால், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
டிக்டாக் செயலியை விற்பதற்கான காலக்கேடுவை நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க முன்வந்தது. ஆனால் பைட்டான்ஸ் நிறுவனம் அதனை மறுத்துள்ளது. இந்தநிலையில், டிக்டாக்கை மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஆரக்கல் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.