நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை தேதி நீதிமன்றம் வழங்கியது.பின் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை அனுப்ப பிரிட்டன் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் தான் விஜய் மல்லையா இந்தியாவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்து பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…