மீண்டும் கொரோனா வைரஸ் தாக்க வாய்ப்பு ! ஆய்வு முடிவை தெரிவித்த விஞ்ஞானிகள்
கொரோனா வைரஸ் 2025-ஆம் ஆண்டு மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.எனவே கொரோனா பரவாமல் இருக்க தனிமனித இடைவெளி அவசியம் என்று உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றது.இதற்காக உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வீடுகளிலே முடங்கியுள்ளனர்.
இதற்கு இடையில் ஹார்டுவேர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை 2022-ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.தனிமனித இடைவெளியை தளர்த்தினால், அது குளிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.மேலும் கொரோனா வைரஸ் 2025-ஆம் ஆண்டு மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.