ஒப்போ ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒப்போ ரெனோ 11 (OPPO Reno 11) சீரியஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ (OPPO) நிறுவனத்தில் இருந்து இப்படிப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனை தானே இவ்ளோ நாளா பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி, அட்டகாசமான அம்சங்களுடன் ஒப்போ ரெனோ 11 ப்ரோ (Oppo Reno 11 Pro) மற்றும் ஒப்போ ரெனோ 11 (Oppo Reno 11) என 2 புதிய மாடல் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அது தற்போது நடந்துள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி (MediaTek Dimensity) சிப்களுடன் OPPO Reno 11 சீரியஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ நேர்த்தியான வடிவமைப்பு, வேகமான சார்ஜிங் மற்றும் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்டு இயங்கும். Oppo Reno 11 சீரியஸ் – CPH2599 மாடல் எண்ணுடன் Oppo Reno 11 மற்றும் மாடல் எண் CPH2607 உடன் Oppo Reno 11 Pro ஆகியவை வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்களுமே 3 முக்கிய ஆண்ட்ராய்டு 17 வரையிலான ஓஎஸ் அப்டேட்கள் (Android Updates) மற்றும் 4 ஆண்டுகள் வரையிலான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates) பெறும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 11 சீரிஸின் சிப்செட்களை பொறுத்தவரை, ரெனோ 11 மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 SoC) உடனும், ரெனோ 11 ப்ரோ மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் (MediaTek Dimensity 8200 SoC) உடனும் கொண்டு இயங்கும்.
புது புது கலர்! கண்களை கவரப்போகும் வாட்ஸ்அப்! புது அப்டேட்!
இரண்டு மாடல்களும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் 6.70 – இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. மேலும், 50 மெகா பிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும், 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 11 ப்ரோவில் 80W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்-யுடன் 4,700 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதுபோன்று, ஒப்போ ரெனோ 11 சீரியஸ் 67W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்-யுடன் 4,800 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.
மேலும் அம்சங்களான WiFi 6, 5, புளூடூத் 5.3, NFC மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவை அடங்கும். ஏஐ எனேபிள்டு ஸ்மார்ட் டச், புதுப்பிக்கப்பட்ட ஃபைல் டாக், ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் அம்சம் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் போன்ற பல ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. 8GB ரேம், 128GB ரோம் கொண்ட ஒப்போ ரெனோ 11 சீரியஸ்-யின் விலை ரூ.29,999 ஆகவும், அதே சமயம் 12GB ரேம், 256GB ரோம் கொண்ட ஒப்போ ரெனோ 11 ப்ரோவின் விலை ரூ.39,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…