“அட்டகாசமான! OPPO F19 மாடல்-5 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும்…!
சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன OPPO, இந்தியாவில் அதன் புதிய மாடலான F19ஐ 5000 mAh பேட்டரி மற்றும் 33W ஃப்ளாஷ் சார்ஜ் வசதியுடன் ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.
OPPO நிறுவனம் 5000 mAh பேட்டரியுடன் அதன் F19 மாடலை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதில் 33W ஃப்ளாஷ் சார்ஜ் வசதி இடம்பெறுகிறது. இது 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 5.5 மணிநேரம் பேசுவதற்கான வசதியை வழங்குகிறது.
OPPO நிறுவனம், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் ஜாகிர் கானுடன் இணைந்து ஏப்ரல் 6, 2021 அன்று ஒரு முக்கிய நிகழ்ச்சியில் F19 மாடலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இன்றைய ஸ்மார்ட்போன் பயனாளர்களின் வேகமான வாழ்க்கை முறையுடன் பொருந்தவும், மிக நேர்த்தியான மற்றும் வேகமான அம்சங்களை நிரூபிக்கும் வகையில் F19-ன் இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
OPPO F19 சிறப்பம்சம்:
OPPO F19 ஆனது 33W ஃப்ளாஷ் சார்ஜுடன் கூடிய 5000mAh பேட்டரி மற்றும் ஒரு அற்புதமான AMOLED Full HD டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.இந்த ஃப்ளாஷ் சார்ஜ் மூலம், OPPO F19ஐ முழுமையாக சார்ஜ் செய்ய 72 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. மேலும் 30நிமிடம் சார்ஜ் செய்தால் 54% சார்ஜ் அளவைக் கொண்டிருக்கும்.