சைலண்டாக வெளியிட்ட ஒப்போ நிறுவனத்தின் A-91 மொபைல்..!

Default Image
  • ஒப்போ நிறுவனம் தனது மிட்-ரேங்ச் போனான ஒப்போ ஏ 91 என்ற போனை வெளியிட்டது.
  • இந்த மொபைல், யாருக்கும் தெரியாமல் சைலண்டாக அந்நிறுவனம் வெளியிட்டது.

ஒப்போ நிறுவனம் நேற்று தனது மிட்-ரேங்ச் போனான ஒப்போ a91ஐ அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்டு 9 பை யை கொண்டுள்ள ஒப்போ ஏ 91ல் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) ஸ்மார்ட்போனாக இருக்கும். இது நானோ சிம் மற்றும் நானோ சிம்களை பொருத்தலாம். இந்த போனின் சிறப்பம்சங்களை காணலாம்.

Image result for oppo a91 price in india"

டிஸ்ப்ளே:
இந்த மொபைலின் டிஸ்ப்ளே 6.4 இன்ச் ஃபுல் ஹெடி உடன் வருகிறது. இதில் 2400×1080 பிக்சல் தீர்மானம் கொண்டது. மேலும் இது, 19:5:9 டிஸ்ப்ளே ரேஷியோவை கொண்டுள்ளது.

கேமரா:

இந்த ஒப்போ a 91 மொபைலில் பின்புறத்தில் 48+8+2 (அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார் + 119 டிகிரி வியூ)என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளது. மேலும், முன்புற கேமராவை பற்றிய தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை.

பேட்டரி:

பேட்டரியை பொருத்த அளவில் VOOC 3.0 ஃபிளாஷ் ஜார்ஜ் தொழில்நுட்பத்துடன் கூடிய 4000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதே 30 நிமிடங்களில் 0-60 வரை சார்ஜ் ஏரும் திறமை கொண்டுள்ளது.

ஸ்டோரேஜ்:

இந்த ஓப்போ a 91 ஆனது, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது. மேலும் இதில், 256 ஜிபி வரை அடிஷனல் மெமரியை உள்ளடக்கலாம்.

விலை:

இந்த ஒப்போ a91 ரக மொபைல் ஆனது, இந்திய விலைப்படி 17, 990 விலை முதல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்