திறந்தன பள்ளிகள்…! சிட்டுக் குருவிகளே சிறகடித்து வாருங்கள்…! – கவிஞர் வைரமுத்து
திறந்தன பள்ளிகள் சிட்டுக் குருவிகளே சிறகடித்து வாருங்கள் ஆசிரியர்களே! பிள்ளைகளுக்குப் பெற்றோராகுங்கள் பெற்றோர்கள் ஆசான்களாகுங்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து வந்த நிலையில், இந்த தொற்று பாதிப்பு தொடர்ந்து வந்த நிலையில், கடந்த 500 நாட்களுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்.1-ஆம் தேதி முதல் 9-12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனையடுத்து, நவ.1-ஆம் தேதி முதல் 1-8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் 1-8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, மாவிலை தோரணம், வாழைமரங்களை கட்டி பல்வேறு வகையான அலங்கரிப்புகளுடன் ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், திறந்தன பள்ளிகள் சிட்டுக் குருவிகளே சிறகடித்து வாருங்கள் ஆசிரியர்களே! பிள்ளைகளுக்குப் பெற்றோராகுங்கள் பெற்றோர்கள் ஆசான்களாகுங்கள் ஆணிகள் அறையாதீர்கள், முற்றாத மூளைகளில் அறிவு பின்பு; அன்பு முன்பு இடைவெளியின் வெற்றிடத்தை இதயத்தால் நிரப்புங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
திறந்தன பள்ளிகள்
சிட்டுக் குருவிகளே
சிறகடித்து வாருங்கள்ஆசிரியர்களே!
பிள்ளைகளுக்குப் பெற்றோராகுங்கள்பெற்றோர்கள்
ஆசான்களாகுங்கள்ஆணிகள் அறையாதீர்கள்
முற்றாத மூளைகளில்அறிவு பின்பு;
அன்பு முன்புஇடைவெளியின் வெற்றிடத்தை
இதயத்தால் நிரப்புங்கள்— வைரமுத்து (@Vairamuthu) November 1, 2021