ஜப்பானில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள ஓட்டல்கள்.
முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகள் தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் நோயினால் இதுவரை உலக அளவில், 3,308,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 234,108பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், குறைந்த அளவு கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை தங்கவைத்து சிகிச்சையளிப்பதற்காக 2 ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டல்களில் செவிலியர்களுக்கு பதிலாக, 2 ரோபோக்கள் நோயாளிகளுக்கு பணி செய்கின்றன.
இதில் பெப்பர் என பெயரிடப்பட்டுள்ள ரோபோ, நோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேசுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓட்டலுக்கு வருகை தந்த டோக்கியோ ஆளுநர், யுரிக்கோ கொய்க்கியை இந்த பேப்பர் ரோபோ வரவேற்றுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்டுள்ள மற்றோரு ரோபோ, கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று, கிருமினாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், ஸ்மார்ட்போன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உடல் வெப்பநிலையை ஆய்வு செய்கிறது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…