#US Election: எனது முன்னிலையில் தான் வாக்குகள் எண்ணிக்கையை நடத்த வேண்டும்! – ட்ரம்ப் அடாவடி
எனது முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அமெரிக்காவில் அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ட்ரம்ப் மற்றும் அவருடைய பரப்புரை குழுவினர் மூன்று மாநிலங்களில் வழக்கை தொடர்ந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். அவர் 70 மில்லியனுக்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.
அலாஸ்கா. பென்சில்வேனியா, மிச்சிகன், மிஸ்கன்சான், ஜார்ஜியா, நெவேடாவில் இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடேன் 264 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 வாக்குகளே தேவையாக உள்ளது.
நிவானா மாநிலத்தில் உள்ள மொத்தம் 6 வாக்குகளை பைடன் கைப்பாற்றினால், 270 என்ற மேஜிக் என்ணை பைடன் அடையாளம். ஆனால் முடிவுகள் அறிவிக்கப்படாத 6 மாநிலங்களில் உள்ள மொத்தம் உள்ள 60 வாக்குகளை பெற்றால் தன, அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற முடியும்.
இதனிடையே, வாக்கு எண்ணிக்கையில், மோசடி நடப்பதாக ட்ரம்ப் 3 மாநிலங்களில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் தனது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். முடிவுகள் அறிவிக்கப்பட்டு, எதிர்வேட்பாளர் வெற்றியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே வெற்றியை அறிவிக்க முடியும் என்ற விதி அமெரிக்காவில் உள்ளது.
அதன்படி, தோல்வியடைந்தவர் ஆட்சேபம் தெரிவிக்கும் பட்சத்தில், வழக்கு தொடரவும் உரிமை உண்டு. இதற்கு முன்னதாக, இதுகுறித்து ஜனநாயக கட்சியின் வழக்கறிஞரும், வெள்ளை மாளிகையின் முன்னாள் சட்ட ஆலோசகருமான பாப் பவுயெர்,’வாக்கு எண்ணிக்கை நாளில் எண்ணப்பட்ட வாக்குகளை தகுதி நீக்க செய்ய கோரி உச்சநீதிமன்றத்துக்கு போனால், ஒரு அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மிகவும் அசிங்கப்பட்டு தோல்வியடைவார்.’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
live :அமெரிக்க தேர்தல் முடிவுகள் பற்றி தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் தினச்சுவடு தமிழுடன் .