ஒரே இயக்குனர்.! 6 கதைக்களம்.! மங்காத்தா இயக்குனரின் புதிய முயற்சி.!
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கசடதபற படம் சோனி லைவ் OTT தளத்தில் வெளியாக உள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 23- ஆம் புலிகேசி படத்தை இயக்கி மிகவும் பிரபலமானவர் இயக்குனர் சிம்பு தேவன். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சிம்பு தேவன் அடுத்ததாக இவர் இயக்கத்தில் அடுத்ததாக கசடதபற எனும் திரைப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தங்களது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தயாரித்துள்ளார்.
நீண்டகாலமாக இந்த திரைப்படம் இதில் வெளியாகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்தது. இதனையடுத்து தற்போது இந்த திரைப்படம் சோனி லைவ் OTT தளத்தில் வெளியாக உள்ளதாம். ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தில், இந்த படத்தில் சாந்தனு , ஹரிஷ் கல்யாண், சங்கர், ரெஜினா, பிரேம் ஜி அமரன், பிரியா பவானி, சுந்தீப் கிசான், வெங்கட் பிரபு, என பலர் நடித்துள்ளனர்.
விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன் என 6 ஒளிப்பதிவாளரும், ஆண்டனி, பிரவீன்.கே.எல், விவேக் ஹர்ஷன், மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமத், ரூபென் என 6 எடிட்டர்களும், யுவன் சங்கர் ராஜா, பிரேம் ஜி அமரன், சாம்.சி.எஸ், சீன் ரோல்டன், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான் என 6 இசையமைப்பாளர்களும் இந்த ஒரு படத்தில் பணியாற்றியுள்ளனர்.
We are happy to announce our #kasadatabara will be streaming very soon on @sonyliv @chimbu_devan @vp_offl @tridentartsoffl @sonylivintl @001danish @golu_a @madhurasreedhar @dhananjayang #TalesOfSouthMadras ps. the artwork in this poster was done by our director in just 20mins???????? pic.twitter.com/VcmfwDG1R4
— venkat prabhu (@vp_offl) August 8, 2021