38 சதவீதம் பேர் வெறுப்பை மட்டுமே வெளிப்படுத்துகின்றனர்.! அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக்.!
Facebook பக்கத்தில் 38 சதவீதம் பேர் வெறுப்புப் பேச்சுகளை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளனர் என்று அந்நிறுவனம் தகவல்.
இதுதொடர்பாக Meta நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையின்படி, சமூக ஊடகத் தளமான ஃபேஸ்புக்கில் வெறுப்புப் பேச்சுக்கள் சுமார் 37.82 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்ஸ்டாகிராமில் வன்முறை மற்றும் தூண்டுதல் உள்ளிட்ட உள்ளடக்கங்கள் 86 சதவீதம் அதிகரித்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. இதில், பெரும்பாலான உள்ளடக்கம், பயனர்கள் தங்களுக்குப் புகாரளிப்பதற்கு முன்பு சமூக ஊடகத் தளங்கள் மூலம் கண்டறிவதை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறியுள்ளது.
மே 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஏப்ரலில் 53,200 வெறுப்புப் பேச்சுகளை பேஸ்புக் கண்டறிந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்ட 38,600 உடன் ஒப்பிடும்போது 37.82 சதவீதம் அதிகமாகும். இதுபோன்று, இன்ஸ்டாகிராமில் ஏப்ரலில் 77,000 வன்முறை மற்றும் தூண்டுதல் தொடர்பான உள்ளடக்கங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது மார்ச் மாதத்தில் 41,300-ஆக இருந்தது என்றும் Meta நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில் கூறியுள்ளது.