சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் உகானில் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் நேற்று மட்டும் 150 பேர் உயிரிழந்து, உலக முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,592-ஆக உயர்ந்தது. மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,000-ஐ எட்டியுள்ளது என உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் கொவிட்-19 வைரசுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 161 பேருக்கு இந்த சைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 763-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 8,720 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தென்கொரிய அரசு, தேசிய அச்சுறுத்தல் அளவை ‘ரெட் அலார்ட்’ ஆக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…