வெறும் 10 பந்துகள் மட்டும் வீசிய சர்துல் தாகூர்..!காயத்துடன் வெளியேறிய பரிதாபம் …!
அறிமுக டெஸ்டில் வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயத்துடன் வெளியேறியுள்ளார் சர்துல் தாகூர்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியா அணியில் பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பான்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ,ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றனர்.முகமது சமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் இது தான் அவருக்கு அறிமுக டெஸ்ட் போட்டி ஆகும்.ஆனால் அறிமுக டெஸ்டில் வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயத்துடன் வெளியேறியுள்ளார் சர்துல் தாகூர்.ஆனால் காயம் குறித்த தக்வல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.இன்று முழுவதும் அவர் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.