“பிளாக்ஷிப் கில்லர்” என்று அழைக்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனம் , தற்பொழுது புதிதாக ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷனை அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக இது, பெங்களூர் விமான நிலையத்தில் அறிமுகமானது.
“பிளாக்ஷிப் கில்லர்” என்று அழைக்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனம், சமீபத்தில் தனது ஒன்பிளஸ் நார்டு, ஒன்பிளஸ் 8T 5G-ஐ ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. இந்திய சந்தை மட்டுமின்றி, உலகளவில் தற்பொழுது அதிகளவில் வாங்கப்படும் போனாக அமைந்துள்ளது. இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்ப்ளஸ், தனது பயனர்களுக்காக புதிதாக ஒரு அம்சத்தை வழங்கியது. அது, ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன். இந்த சார்ஜிங் ஸ்டேஷனில் நீங்கள் உங்களின் மொபைல்க்கு சார்ஜ் செய்துகொள்ளலாம்.
ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன்:
இந்தியாவில் ஒன்பிளஸ் மொபைல் வைத்திருப்போர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் (உதாரணத்திற்கு, விமான நிலையங்களில்) ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கும். அங்கு சென்றால், நீங்கான் உங்களின் மொபைலிற்கு சார்ஜ் செய்து கொள்ளலாம். இதனை கண்டுபிடிக்கவும் எளிது. உங்களின் ஒன்ப்ளஸ் மொபைல் மூலமாக இந்த இடத்தை நீங்கள் ட்ராக் செய்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி, இந்த ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷனில் 30W Warp சார்ஜிங் வசதியும் இருக்குமென கூறப்படுகிறது. இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களில் beacon உதவியால், அருகிலுள்ள சார்ஜிங் நிலையத்தை அடையாளம் காணலாம்.மேலும், இந்த சார்ஜிங் ஸ்டேஷன் முதற்கட்டமாக பெங்களூர் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி விமான நிலையத்தில் கூடிய சீக்கிரம் அமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…