அடேங்கப்பா ! 9,000 அடி உயரத்தில் அமேசான் செய்த ” UNBOXING ” வீடியோ

அமேசான், 9,000 அடி உயரத்தில் ONEPLUS 9 Pro 5G ஐ unboxing செய்யும் ஒரு வித்தியாசமான ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.
அமேசான் நிறுவனம் ONEPLUS 9 Pro 5G ஸ்மார்ட்போனை 9,000 அடி உயரத்தில் அறிமுகம் செய்யும்( unboxing ) செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 50MP கேமரா 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலவு தரையிறக்க பயன்படுத்தப்பட்ட கேமராவான ‘ஹாசல்பாட் கேமராவின்’ அம்சங்களை கொண்டுள்ளது.மேலும் இதில் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமேசானில் விற்பனைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அமேசான், “இனையதளங்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பல வீடியோக்கள் கொட்டிக்கிடக்கிறது.அவை எல்லாம் ஒரே மாதிரியான முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது.எனவே ONEPLUS 9 Pro யை 9,000 அடி உயரத்தில் சற்று வித்தியாசமாக அறிமுகம் செய்ய திட்டமிட்டு இப்படி ஒரு வித்தியாசமான வீடியோவை வெளியிட்டுள்ளோம். இது ஒன்பிளஸ் பயனாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது”,என்று அமேசான் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025