ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 8T 5G -ஐ இன்று மாலை வெளியிடவுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம், சமீபத்தில் தனது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட் போனை வெளியிட்டது. இந்திய சந்தை மட்டுமின்றி, உலகளவில் தற்பொழுது அதிகளவில் வாங்கப்படும் போனாக அமைந்துள்ளது. இந்தநிலையில் ஒன்பிளஸ், நாளை தனது பிளாக் ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 8T 5G-ஐ இன்று மாலை வெளியிடவுள்ளது. இது, ஒன்பிளஸ் 8-ஐ விட கூடுதலாக சில அம்சங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த மொபைலின் விவரங்கள் குறித்த விவரங்கள் சில வலைத்தளங்களில் வெளியானது.
இந்த ஒன்பிளஸ் 8T-ல் 6.55 இன்ச் 120Hz AMOLED flat டிஸ்ப்ளே வசதி, 4,500 mAh பேட்டரி, அதனை சார்ச் செய்ய 65W வார்ப் சார்ஜர் மற்றும் பின்புறத்தில் நான்கு கேமரா அமைப்புகள் உள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதில் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 11 மூலம் இயங்கும்.
இதில் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டுகள் வரும் எனவும், இதில் தற்போதைய வேகமான ப்ரோசஸரான Qualcomm Snapdragon 865+ இருக்குமெனவும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் 8T 5G-யின் அறிமுக விழா, இன்று மாலை 7.30PM Iமணிக்கு தொடங்கவுள்ளது. இந்த நேரலையை ஒன்பிளஸ்-ல் யூ-டியூப் சேனலில் காணலாம்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…