இன்று வெளியாகவுள்ளது Oneplus 8T.. எதிர்பார்க்கப்படும் 120Hz AMOLED flat டிஸ்ப்ளே இருக்குமா?

Default Image

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 8T 5G -ஐ இன்று மாலை வெளியிடவுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம், சமீபத்தில் தனது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட் போனை வெளியிட்டது. இந்திய சந்தை மட்டுமின்றி, உலகளவில் தற்பொழுது அதிகளவில் வாங்கப்படும் போனாக அமைந்துள்ளது. இந்தநிலையில் ஒன்பிளஸ், நாளை தனது பிளாக் ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 8T 5G-ஐ இன்று மாலை வெளியிடவுள்ளது. இது, ஒன்பிளஸ் 8-ஐ விட கூடுதலாக சில அம்சங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த மொபைலின் விவரங்கள் குறித்த விவரங்கள் சில வலைத்தளங்களில் வெளியானது.

இந்த ஒன்பிளஸ் 8T-ல் 6.55 இன்ச் 120Hz AMOLED flat டிஸ்ப்ளே வசதி, 4,500 mAh பேட்டரி, அதனை சார்ச் செய்ய 65W வார்ப் சார்ஜர் மற்றும் பின்புறத்தில் நான்கு கேமரா அமைப்புகள் உள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதில் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 11 மூலம் இயங்கும்.

இதில் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டுகள் வரும் எனவும், இதில் தற்போதைய வேகமான ப்ரோசஸரான Qualcomm Snapdragon 865+ இருக்குமெனவும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் 8T 5G-யின் அறிமுக விழா, இன்று மாலை 7.30PM Iமணிக்கு தொடங்கவுள்ளது. இந்த நேரலையை ஒன்பிளஸ்-ல் யூ-டியூப் சேனலில் காணலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்