மிரட்டல் அறிமுகம்..24ஜிபி ரேம்..5,400mAh பேட்டரி.! ஒன்பிளஸ்-இன் புதிய மாடல்.?

OnePlus 12

ஸ்மார்ட்போன் பிரியர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன், அட்டகாசமான அம்சங்களுடன் அனைவருக்கும் வாங்கும் எண்ணத்தை தூண்டும் விலையுடன் இன்று (டிசம்பர் 5ம் தேதி) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஒன்பிளஸ் 12 போன் ஜனவரி 24ம் தேதி இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம். இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்பதை காணலாம்.

டிஸ்பிளே

இதன் டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, 3168×1440 பிக்சல்கள் (2K) ஹைரெசல்யூஷன் கொண்ட 6.82 இன்ச் க்யூஎச்டி+ (Quad High Definition) அமோலெட் கர்வுடு (AMOLED curved) டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) கொண்டுள்ளது. கேமர்களுக்காக 240 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சம்ப்ளிங் ரேட் (Touch sampling rate) உள்ளது.

இந்த வாரம் அறிமுகமாகிறதா நத்திங் ஃபோன் 2ஏ.? வெளியான மறைமுக அப்டேட்!

இது சாதாரண பயன்பாடுகளுக்கு 125 ஹெர்ட்ஸ் ஆக இருக்கும். வெளியில் செல்லும்போது கூட டிஸ்பிளே தெளிவாக தெரிய 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (Brightness) கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2 glass), இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (In-display Finger Print) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) வசதி உள்ளது.

பிராசஸர்

PJD110 என்கிற நெட்வொர்க் மாடல் என் கொண்ட ஒன்பிளஸ் 12, அட்ரினோ 750 (Adreno 750) கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட 8 கோர்களைக் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) பொருத்தப்பட்டுள்ளது. இது 4 நானோமீட்டர் செயல்முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது.

இந்த சிப்செட் சிறப்பான AI திறன்கள், கேமரா திறன்கள், கேமிங், தரமான ஆடியோ மற்றும்  அதிவேக இணைப்பிற்கான வசதிகளுடன் பயனருக்கு சிறப்பான அனுபவங்களை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்டையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 14.0 உள்ளது.

சூப்பர் லீனியர் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், அண்டர்-ஸ்கிரீன் ப்ராக்ஸிமிட்டி சென்சார், அண்டர் ஸ்கிரீன் லைட் சென்சார், கைரோ, ஹால் சென்சார், ஆக்சிலரோமீட்டர், கிராவிட்டி சென்சார் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் சென்சார் உள்ளது. இதனால் போனை ரிமோட் ஆகவும் பயன்படுத்தலாம்.

கேமரா

கேமராவைப் பொருத்தவரை ஹாசல்பிளாடிற்கான (Hasselblad) ‘எச்’ பிராண்டிங் மற்றும் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) சோனி லிட்யூ LYT-808 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, சோனி IMX581 சென்சார் கொண்ட 48 எம்பி சூப்பர்-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம், 6X சென்சார் ஜூம் மற்றும் 120X டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 எம்பி சூப்பர் லைட் மற்றும் ஷேடோ பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா அடங்கும்.

முன்புறம் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் ப்ரோ மோட், போர்ட்ரைட், நைட் சீன், பனோரமா, ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ் போன்ற பல கேமரா அம்சங்கள் உள்ளன. 720 பிக்சல் முதல் 8K தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும். அதோடு வைஃபை 7, வைஃபை 6, வைஃபை 5, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் 5ஜி வசதி உள்ளது.

முதல் பெண் கதாநாயகி அறிமுகம்.! வெளியானது GTA 6 டிரெய்லர்.!

பேட்டரி

220 கிராம் எடையுள்ள ஒன்பிளஸ் போனில் 5,400 mAh லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 100 வாட்ஸ் வயர்டு சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இதில் 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த யுஎஸ்பி டைப்-சி போர்ட்டில் யுஎஸ்பி 3.2 ஜென் 1 சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ்

ராக் பிளாக் Rock Black), வெள்ளை (White) மற்றும் வெளிர் பச்சை (Pale Green) என மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ள ஒன்பிளஸ் 12, 24 ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் (LPDDR5x) ரேம் மற்றும் 1 டிபி யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. மற்ற ரேம்களுடன் ஒப்பிடும்போது சிறந்த செயல்திறன் மற்றும் ஆற்றல் செயல்திறனை எல்பிடிடிஆர்5எக்ஸ் வழங்குகிறது.

இது கிட்டத்தட்ட 6.4Gbps இலிருந்து 8.5Gbps வேகத்தில் டேட்டா ட்ரான்ஸ்ஃபெர் செய்யும். அதேபோல யுஎஃப்எஸ் 4.0 ஆனது 1 டிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதில் ரீட் ஸ்பீட் என்பது ஒரு வினாடிக்கு 4.2 ஜிபி ஆகவும், ரைட் ஸ்பீட் என்பது ஒரு வினாடிக்கு 2.8 ஜிபி ஆகவும் இருக்கும். ஒன்பிளஸ் 12 ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் என நான்கு வேரியண்ட்களில் உள்ளது.

விலை

இதில் 12 ஜிபி ரேம் வேரியண்ட் 4,299 யுவான் (ரூ.50,635) என்கிற விலையிலும், 16 ஜிபி ரேம் வேரியண்ட் 4,799 யுவான் (ரூ.56,525) என்கிற விலையிலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 5,299 யுவான் (ரூ.62,415) என்கிற விலையிலும், 24 ஜிபி ரேம் வேரியண்ட் 5,799 யுவான் (ரூ.68,300) என்கிற விலையிலும் விற்பனைக்கு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்