பாடும் நிலா மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவு.! #SPB- யின் சில நினைவு துளிகள்…

Default Image

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1966ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் 1969-ல் சுசிலாவுடன் இணைந்து, ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடலை பாடியதன் மூலம் அறிமுகமானார்.

S. P. Balasubrahmanyam 4

பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வந்துள்ள இவர், பல திரைப்பட நடிகர்களுக்கு பின்னணி குரல் அளித்துள்ளார். இதனால் இவருக்கு இந்திய அரசு கடந்த 2001- ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கி சிறப்பித்தது.

S. P. Balasubrahmanyam 2

தமிழில் இசையமைப்பாளர் எம்.எஸ் வி விஸ்வநாதன் இசையில் பாட ஆரம்பித்த எஸ்.பி.பி அனிருத் வரை அனைவரின் இசையிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார். இளையராஜா, தேவா, வித்யாசாகர், எ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா என  கிட்டத்தட்ட அணைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய ஒரே ஒரு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமாக தான் இருக்க முடியும் என்கிற அளவிற்கு பல பாடல்கள் பாடியுள்ளார்.

S. P. Balasubrahmanyam 3

40,000-ற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் 6 முறை பெற்றிருக்கிறார். இதுவரை தேசிய விருதினை 4மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்பிபி ஒருவரே.

இதுமட்டுமின்றி இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்று சாதனை படைத்துள்ளார்.  இந்நிலையில், இன்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்த்து ஓராண்டு ஆகிவிட்டதையொட்டி ரசிகர்கள் மற்றும், திரையுலக பிரபலங்கள் அவரது புகைப்படங்களை பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்