உலகையே தலைகீழாக மாற்றியாக கொரோனா வைரஸ் பரவி ஓராண்டு நிறைவு !

Default Image

கொரோனா வைரஸ் கடந்த வருடம் இதே தினத்தில் தான் பரவ தொடங்கியது.நேற்றுடன் கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது.

உலகம் முழுவதையும் தலை கீழாக மாற்றிய‌து கொரோனா வைரஸ் தொற்று . சீனாவின் வுஹானில் இருந்து கொரோனா வைரஸ் கடந்த வருடம்  நவம்பர் 17-ஆம் தேதி பரவ தொடங்கியது .தென் சீனா மார்னிங் போஸ்டின் கூற்றுப்படி, முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்த 55 வயதான நபர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் .மேலும் இந்த தொற்றுக்கு காரணமான கொரோனா வைரஸ் ஒரு சந்தையில் இருந்து உருவாகியதாக கூறப்பட்டாலும் ,அதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் ,முதல் இறப்பு ஜனவரி 11-ஆம் தேதி நடந்தது .66 வயதான நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முதலில் இறந்தார் ‌அதன் பின்னரே சீனாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து இந்த கொரோனா உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை கொன்றது .

அதனையடுத்து சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை WHO அசாதாரண நிகழ்வு என்று கூறி அறிவித்தது .அதனையடுத்து இந்த கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து , ஸ்பெயின் மற்றும் இந்தியா ஆகியவை அடங்கும்.தற்போது வரை கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரமாக பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

திங்களன்று,மாடர்னா உருவாக்கிய கொரோனா தடுப்பூசி கொரோனாவுக்கான சிகிச்சையில் 95% பயனுள்ளதாக இருப்பதாக கூறியிருந்தது . உலகில் இந்த கொரோனா தொற்று காரணமாக மொத்தம் 1.3 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ,190 நாடுகளில் 50 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இன்றுடன் இந்த கொடிய‌ கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடத்தை எட்டியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்