சூரிய மின்சக்தியில் இயங்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து சாதனை.!
சூரிய சக்தி மூலம் இயங்கும் குட்டி விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குறித்த முதல் நபர் என்ற சாதனையை ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ரஃபேல் டோம் ஜான் என்பவர் படைத்துள்ளார்.
சுவிச்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரஃபேல் டோம் ஜான் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சூரிய மின் சக்தியில் இயங்கும் விமானம் ஒன்றை வடிவமைத்து இருந்தார். அது பெரும்பாலானோரை கவர்ந்தது. தற்போது அந்த சூரிய விமான சூரிய சக்தி மூலம் இயங்கும் குட்டி விமானத்தில் இருந்து கீழே பாராசூட் மூலம் குதித்த முதல் நபர் என்ற பெருமையை டோம் ஜான் படைத்துள்ளார்.
பைரன் விமானப்படை தளத்திலிருந்து சக விமானிகளுடன் ஜான் தனது சூரிய சக்தியால் இயங்கும் விமானத்தில் பறந்தார். கிட்டத்தட்ட 5000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது தனது பாராசூட்டை பயன்படுத்தி விமானத்தில் இருந்து கீழே குதித்தார். பாராசூட் மூலம் வெற்றிகரமாக தரையில் வந்து இறங்கினார். இந்த சாதனை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
மேலும், சூரிய சக்தி மூலம் இயங்கும் குட்டி விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குறித்த முதல் நபர் என்ற பெருமையை ரஃபேல் டோம் ஜான் பெற்றுள்ளார். சூரியசக்தி மூலம் இயங்கும் விமானத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை செய்ய முடியும் எனும் நம்பிக்கை தரவே இந்த முயற்சி மேற்கொண்டதாக ஜான் குறிப்பிட்டார்.