அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஹைன்ஸ் என்பவர் கொரோனா காலத்தில் தத்தளிக்கும் சிறு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கடன் தொகையை முறைகேடாக பெற்று அதனை கொண்டு ஒரு புதிய லம்போகினி காரை வாங்கியுள்ளார்.
கொரோனா காலத்தில் சிறு நிறுவனங்களை காக்கும் நோக்கில் கடன் வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தியது. Paycheck Protection Program என்கிற பெயரில் இந்த கடன் வழங்கப்படுகிறது.
இந்த கடனை பெற டேவிட் ஹைன்ஸ் வங்கியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். 3 விண்ணப்பங்களை வெவ்வேறு வங்கிகளுக்கு 13.5 மில்லியன் கடன் பெற கொடுத்துள்ளார். அதில் 4 மில்லியன் கடன்தொகையை பெற்றுள்ளார்.
கடன் பெற்று அதனை கொண்டு, 318,000 டாலர் மதிப்புள்ள புதிய லம்போகினி ( Lamborghini Huracan sports car ) சொகுசு காரை வாங்கியுள்ளார். அதன் பிறகு தான், டேவிட் ஹைன்ஸ் தாக்கல் செய்த அனைத்தும் போலி ஆவணங்கள் என தெரியவந்தது. இதனை அடுத்து, டேவிட் ஹைன்ஸ் மீது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, போலி ஆவணங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்ப்பட்டார்.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…