கொரோனா கால சிறப்பு கடன் பெற்று லம்போகினி கார் வாங்கிய இளைஞர் கைது.!

Default Image

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஹைன்ஸ் என்பவர் கொரோனா காலத்தில் தத்தளிக்கும் சிறு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கடன் தொகையை முறைகேடாக பெற்று அதனை கொண்டு ஒரு புதிய லம்போகினி காரை வாங்கியுள்ளார்.

கொரோனா காலத்தில் சிறு நிறுவனங்களை காக்கும் நோக்கில் கடன் வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தியது. Paycheck Protection Program என்கிற பெயரில் இந்த கடன் வழங்கப்படுகிறது.

இந்த கடனை பெற டேவிட் ஹைன்ஸ் வங்கியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். 3 விண்ணப்பங்களை வெவ்வேறு வங்கிகளுக்கு 13.5 மில்லியன் கடன் பெற கொடுத்துள்ளார். அதில் 4 மில்லியன் கடன்தொகையை பெற்றுள்ளார்.

கடன் பெற்று அதனை கொண்டு, 318,000 டாலர் மதிப்புள்ள  புதிய லம்போகினி ( Lamborghini Huracan sports car ) சொகுசு காரை வாங்கியுள்ளார். அதன் பிறகு தான், டேவிட் ஹைன்ஸ் தாக்கல் செய்த அனைத்தும் போலி ஆவணங்கள் என தெரியவந்தது. இதனை அடுத்து, டேவிட் ஹைன்ஸ் மீது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, போலி ஆவணங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்ப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss
Palestinian prisoners released by Israel