ஒருவழியாக ஐங்கரன் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு …! பெருமூச்சு விடும் ஜிவி பிரகாஷின் ரசிகர்கள்..!
ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஐங்கரன். இந்த படத்தை காமன்மேன் நிறுவனம் சார்பில் பி கணேஷ் அவர்கள் தயாரித்துள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் அவர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது.
ஆனால் பொருளாதார சிக்கல் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் வெளியாகாமலே நீண்ட காலம் தள்ளிப் போடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக இப்படத்துக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு கொண்டிருந்தது.
இந்தத் திரைப்படம் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக இருந்ததால் மீண்டும் இப்படம் வெளியிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. தற்பொழுது ஒருவழியாக இந்த திரைப்படம் மே மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த அறிவிப்பு,
#Ayngaran releases in theatres on MAY5th … from the director of #eeti .. a film made with good intentions and good content … need ur love and support … pls do share @dir_raviarasu #commonmanganesh @Riyaz_Ctc @Mahima_Nambiar #AyngaranfromMay5th #ayngaran pic.twitter.com/LXG6jD0RCe
— G.V.Prakash Kumar (@gvprakash) April 29, 2022