சூப்பர் ரஜினிகாந்த் அவர்களுக்காக சிம்புவால் பாடப்பட்ட ‘SuperStarAnthem’ என்ற பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் டி. எம். உதயகுமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ராகவா லாரன்ஸ் அவர்களால் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. ‘SuperStarAnthem’ என்ற பாடலை சிம்பு அவர்கள் பாடி தெறிக்கவிட்ட அந்த பாடலை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…