ஒன் ப்ளஸ்-ன் அடுத்த அதிரடி.! 16ஜிபி ராம்… 256ஜிபி ரோம்… வெறும் 55,999 ரூபாயில்…
ஒன் ப்ளஸ் 10T. எனும் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை 55,999 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது.
செல்போன் சந்தையில் மிக பாதுகாப்பான , தரமான கேமிரா மற்றும் மற்ற வசதிகளுடன் பயணர்களால் பார்க்கப்படும் மொபைல் என்றால் அது ஐ-போன். அதற்கு அடுத்ததாக பயணர்களால் மிகவும் விரும்பப்படும் தரமான போன் என்றால் அது ஒன் ப்ளஸ் செல்போன்கள்.
இந்த போன் நல்ல கேமிரா வசதி, வேகமான செயல்பாடுகள், பாதுகாப்பு என தரமான போன்களை அவ்வப்போது ரிலீஸ் செய்து வருகிறது. தரத்திற்கு ஐபோன்-க்கு நிகராக கருதப்படுவதாலோ என்னவோ, விலையும் அவ்வாறே நிர்ணயம் செய்யப்படுகிறது.
அப்படித்தான் புதிய மொபைல் மாடலை ஒன் ப்ளஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் ஒன் ப்ளஸ் 10T. எனும் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை 55,999 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது.
இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால் , 16GB RAM 256ஜிபி ஸ்டோரேஜ். இதன் வியாபாரம் ஆகஸ்ட் 16 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150W SUPERVOOC சார்ஜிங், 50 MP டிரிபிள் கேமரா, ஸ்நேப் டிராகான் 8+ ஜெனெரேஷன் 1 பிராசஸர் என குறிப்பிடப்பட்டுள்ளது.