ஸ்பெயினில் முதல் முறையாக “மேற்கு நைல் வைரஸ்” பாதித்து ஒருவர் மரணம்.!
2020-ல் ஸ்பெயினில் முதல் முறையாக “மேற்கு நைல் வைரஸ்” பாதித்து ஒருவர் பலி.
ஸ்பெயினில்”நைல் வைரஸ்” அதாவது கொசுவால் பரவும் நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு முதல் மரணம் ஏற்பட்டதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் லா பியூப்லா டெல் ரியோ நகரைச் சேர்ந்த 77 வயதுடைய நபர் கடந்த வியாழக்கிழமை இரவு இறந்துவிட்டதாக ஸ்பெயினின் தொலைக்காட்சியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, நோயாளி ஊருக்கு அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். அங்கு அவர் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். நாட்டின் தென் பகுதியான அண்டலூசியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மேற்கு நைல் வெடிப்பில் இதுவரை மொத்தம் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் முக்கியமாக அண்டலூசியாவின் இரண்டு நகரங்களை பாதித்தது அதில் லா பியூப்லா டெல் ரியோ மற்றும் கொரியா டெல் ரியோ ஆகும் இவை இரண்டும் குவாடல்கிவிர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. நைல் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் வயது 60 ஆக உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் கொசுக்களால் பரவுகிறது. அவை முக்கியமாக ஆற்றின் அருகில் இருக்கும் பகுதி பாதிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் எந்த அறிகுறிகளும் இல்லாம இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.