சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் இன்று அமேசான் பிரேமில் வெளியாகியுள்ள நிலையில் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இன்று அமேசான் பிரேமில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் . மேலும் ஊர்வசி , கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார் . திரையரங்குகளில் பார்க்க எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஓடிடியில் இன்று கண்டு கழிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வசிப்பவர் நெடுமாறன் ராஜாங்கம் . நெடுமாறனாக நடித்திருக்கும் சூர்யா எளிய ஆசிரியரான ராஜாங்கம் அவர்களின் மகன் . தந்தை ராஜாங்கம் தனது சொந்த ஊருக்கு மின்சாரம் கொண்டு வரவும், சோழவந்தான் ஊரில் ரயில்கள் நிற்கவும் பல கோரிக்கைகளை அரசாங்கத்திடம் மனு எழுதி கேட்கிறார் . இதே போன்று மாறன் என்னும் சூர்யாவிற்கு ஏழை முதல் பணக்காரன் என அனைவரையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்பது தான் கனவு . அந்த கனவிற்கு துணையாக நின்று சூர்யாவை உற்சாகப்படுத்துபவர் சுந்திரியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளி . இவருக்கு பேக்கரி ஒன்றை அமைத்து அதன் முதலாளி ஆக வேண்டும் என்பதே ஆசை . இருவரின் கனவும் நிறைவேறுமா என்பதே படத்தின் கதை .
படத்தை பார்த்த அனைவரும் சூர்யா அருமையாக நடித்திருப்பதாகவும், இதுவரை பார்க்காத சூர்யாவை திரையில் பார்க்க முடிந்ததாகவும் கூறி வருகின்றனர். இது தொடர்பாக பலர் படத்தை பார்த்து விட்டு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் . அதில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட பதிவில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் காற்றாய் கவிதையாய் கனவாய் காட்சிக்கு காட்சி என் கண்களை தெறிக்கவிட்ட சுதா மற்றும் மார்க்கண்டேயரின் தவப்புதழ்வன் சூர்யாவே உங்கள் வியர்வை மழை உங்களை சிகரத்தில் சிறகடிக்க வைத்துவிட்டது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகர் அருண் விஜய்யின் டுவிட்டர் பதிவில் , சூரரை போற்று படத்தில் சூர்யா மிகவும் பிரமாதமாக நடித்துள்ளார் . அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை நன்றாக நடித்துள்ளனர் . மிகவும் ஊக்குவிக்கம் வகையில் இயக்கியுள்ள இயக்குநர் சுதா கொங்கராவிற்கு மற்றும் அவரது படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் . மேலும் உயரமாக பறந்து கொண்டே இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகர் யோகி பாபு வெளியிட்ட பதிவில் அருமையான நடிப்பு என்றும் , நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் சார் என்றும் கூறினார். மேலும் 2020-ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படங்களில் ஒன்று . கண்டிப்பாக சூரரை போற்று திரைப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை போன்று பலர் சூரரை போற்று திரைப்படத்திற்கு தங்களது வாழ்த்துக்களையும் , சூர்யாவின் சிறப்பான நடிப்பிற்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…