ராகவா லாரன்ஸ் தனது குருவான சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பக் காலகட்டத்தில் குரூப் டேன்சராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், பல படங்களில் நடன கலைஞராக தனது முயற்சியால் மற்றும் கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். தன்னுடைய படங்களிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி மாற்று திறனாளிகளின் திறனை வெளி கொண்டு வருவதற்காக பல உதவிகளை செய்து வருகிறார். நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த மனித நேயமுள்ள மனிதராகவும் விளங்குபவர் ராகவா லாரன்ஸ். தற்போது நிலவி வரும் கொரோனா ஊரடங்கிலும் கோடி கணக்கில் நிதியுதவி வழங்கிய ஒரே நடிகர் ராகவா லாரன்ஸ்.
சினிமாவில் வருவதற்கு முன்பு வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்ல கஷ்டப்பட்ட இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த உதவியால் தான் சினிமாயுலகில் குரூப் டேன்சராக அறிமுகமானார். ரஜினிகாந்த் அவர்கள் செய்த உதவியை இன்றும் மறக்காமல் ராகவா லாரன்ஸ் பல மேடைகளில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் உழைப்பாளி படத்திலுள்ள ‘உழைப்பாளி இல்லாத நாடு தான்’ பாடலில் ரஜினியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்.
மேலும் அதனுடன் நான் ஒரு குரூப் டேன்சராக இருந்த போது உழைப்பாளி திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது என் குருவுடனான இனிமையான நினைவுகள். கடின உழைப்பு ஒரு போதும் தோல்வியடையாது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…