ரஷ்யாவிற்கு மேலும் ஒரு அடி! ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு வைத்த கூகுள் ..!

Default Image

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 19 நாட்களாக கடுமையான போர் நடந்து வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. பல நாடுகள் ரஷ்யா மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன மற்றும் பெரிய நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் பல சேவைகளை தடை செய்துள்ளன.  இந்நிலையில், கூகுள் நிறுவனம் சமீபத்தில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஷ்யாவின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பெரும் அடியை கொடுத்துள்ளது.

ரஷ்யாவிற்கு கூகுள் பெரிய அடி கொடுத்தது:

கூகுள் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், கட்டண முறையில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக ரஷ்ய பயனர்களுக்கான பில்லிங் முறையை Google Play தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள கூகுள் பிளே ஸ்டோர்( Google Play Store) மூலம் பயனர்கள் ஆப்ஸ் மற்றும் கேம்களை வாங்கவோ, சந்தா செலுத்தவோ அல்லது டிஜிட்டல் பொருட்களை பயன்பாட்டில் வாங்கவோ முடியாது என்று கூகுள் கூறியுள்ளது. இலவச ஆப்ஸ் Play Store இல் இருக்கும்.

கூகுள் இந்த விஷயங்களை விளக்கியது:

ஏற்கனவே கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் சந்தா பெற்ற பயனர்களின் சந்தாக்கள் புதுப்பிக்கப்படாது ஆனால் அவை ரத்து செய்யப்படும் என்றும் கூகுள் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதாவது ரஷ்ய ஆண்ட்ராய்டு பயனர் இந்த அறிவிப்புக்கு முன் வாங்கிய 1 மாதம் அல்லது 1 ஆண்டு சந்தா வாங்கி இருந்தால் அந்த சந்தா காலம் முடியும் வரை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில், கூகுளின் ஒவ்வொரு அப்டேட்டையும் பயனர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் கூகுள் கூறியுள்ளது. இதற்கு முன் உலகம் முழுவதும் ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்கள், தனிநபர்கள் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்