மலேசியாவில் ஒரு மாதம் முழு ஊரடங்கு…! ஈத் பண்டிகையின் போது மக்கள் கூட அனுமதி மறுப்பு…!
மலேசியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அந்நாட்டின் பிரதமர் முகைதின் யாசின், ஒரு மாத காலம் பொது முடக்கத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சில நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மலேசியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அந்நாட்டின் பிரதமர் முகைதின் யாசின், ஒரு மாத காலம் பொது முடக்கத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். அதன்படி மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழிபாட்டுத்தலங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என்றும், கல்வி நிலையங்கள் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஈத் பண்டிகையின்போது பொதுமக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கமானது, நாளை முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.