ஆயிரத்தில் ஒருவன் 2 படம் கைவிடப்பட்டது என்று பரவும் தகவலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை அருமையாக படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் படத்திற்கான படப்பிடிப்பை 2024 ஆம் ஆண்டு தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து படத்தி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், நெட்டிசன்கள் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதா என்று கூறிவருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்த இயக்குனர் செல்வராகவன் ட்வீட்டரில் ” படத்தின் தயாரிப்பு பணிகள் எப்போது நடந்தது என்று சொல்ல முடியுமா.? படத்தின் தயாரிப்பாளர் யார் என்று கூறமுடியுமா.? தயவு செய்து உங்கள் நம்பகத்தன்மையான ஆட்களிடம் கேட்டு சொல்லுங்கள் ” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…