கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வசூல் நிலவரம்.!

கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை
இந்த திரைப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான 3 நாட்களாக இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் மட்டும் இந்த படம் 2.31கோடியும், சென்னையில் மட்டும் 18 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. நாளுக்கு நாள் படத்தின் வரவேற்பும் வசூலும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025