“தங்க மகன்” தனுஷ் இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும்- பாரதி ராஜா.!
நடிகர் தனுஷிற்கு இயக்குனர் பாரதி ராஜா தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது அசுர நடிபபால் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் நடிகர் தனுஷ். இவரெல்லாம் ஹீரோவா என கூறிய தமிழ் சினிமாவை இவர்தான் ஹீரோ என நினைக்க வைத்தவர் நடிகர் தனுஷ். ஹீரோவிற்கு உண்டான இலக்கணங்களை உடைத்து தனிக்கென தனி பாணியில் பயணித்து வெற்றியும் கண்டு வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
புதுப்பேட்டை, ஆடுகளம், வடசென்னை, அசுரன், ஆகிய திரைப்படங்களில் தனது அட்டகாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார். இந்நிலையில், இன்று நடிகர் தனுஷ் தனது 38- வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
அந்த வகையில், இயக்குனர் பாரதி ராஜா ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதில் ” திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுறவி நம் உணர்வோடு, உறவோடு பின்னப்பட்டாதாய் அமைந்துவிடும். ஆனால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குண நலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்துவிடுவதுண்டு நிஜ வாழ்க்கையில் எப்படியோ அதை திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே. அதில் உன்னை நான் முதன்மையானவனாகப் பார்க்கிறேன் எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் “ நான்” என்கின்ற அகந்தை அற்ற பணிவு சிறந்த கலை தொழில் நுட்ப அறிவு இது போதும் டா. இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும்.
பேரன்புமிக்க “தங்க மகன்’ தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
“தங்க மகன்” தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.@dhanushkraja#HappyBirthdayDhansuh
அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/UGh6fhkEzl— Bharathiraja (@offBharathiraja) July 28, 2021