மணிரத்னம் தயாரிக்கும் வெப்சீரிஸில் ஒரு எபிசோட் வீதம் 9 இயக்குநர்கள் இணைந்து இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தற்போது இவர் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகளை நடுத்த கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின்னரே முடியும் என்றும், அவ்வாறு முடிந்தாலும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி தான் வழங்கப்படும். ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியிலே நூற்றுக்கணக்கானவர்கள் நடிக்க வேண்டியதால் விரைவில் படப்பிடிப்பு நடைபெற வாய்ப்பு இல்லை என்பதால் மணிரத்னம் அவர்கள் சிறிய பட்ஜெட் படம் ஒன்றை எடுக்கும் முயற்சியில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது.அதனை தொடர்ந்து சமீபத்தில் ஓகே கண்மணி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாகவும், ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது இவர் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த வெப்சீரிஸ் 9 எபிசோடுகளை கொண்டதாகவும், ஒவ்வொரு எபிசோடையும் ஒவ்வோரு இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கௌதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் நரேன் உட்பட பல தெலுங்கு திரையுலகினை சேர்ந்த இயக்குநர்களும் இந்த வெப் சீரிஸில் இணைந்து ஒரு எபிசோட் வீதம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 9 இயக்குநர்கள் இணைந்து இயக்கும் இந்த தொடர் பெரியளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…