கிரேக்க தீவான கிரீட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்று காலை தெற்கு கிரேக்க தீவான கிரீட் தீவில் 5.8 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 9:17 மணிக்கு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரேக்க தலைநகர் ஏதென்ஸின் தென்கிழக்கில் 246 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அடுத்து அடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி உள்ளனர். இதன் பின்னர் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், த்ராப்சானோ கிராமத்திற்கு வடக்கே ஏழு கிலோமீட்டர் ஆழத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் அளித்துள்ளது.
இதன் பின்னர் கிரேக்க அதிகாரிகளின் அறிக்கை படி, இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தீவின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களில் உள்ள பழைய கல் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…