கிரேக்க தீவான கிரீட்டில் நிலநடுக்கம்..!ஒருவர் பலி..!

Default Image

கிரேக்க தீவான கிரீட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இன்று காலை தெற்கு கிரேக்க தீவான கிரீட் தீவில் 5.8 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 9:17 மணிக்கு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரேக்க தலைநகர் ஏதென்ஸின் தென்கிழக்கில் 246 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அடுத்து அடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளை விட்டு மக்கள்  வெளியேறி உள்ளனர். இதன் பின்னர் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், த்ராப்சானோ கிராமத்திற்கு வடக்கே ஏழு கிலோமீட்டர் ஆழத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் அளித்துள்ளது.

இதன் பின்னர் கிரேக்க அதிகாரிகளின் அறிக்கை படி, இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தீவின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களில் உள்ள பழைய கல் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்