இன்று ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் -ரஷ்யா அறிவிப்பு..!
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 14 நாட்கள் ஆகி விட்டது. ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீதான போர் இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தம் என ரஷ்யா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை மீட்கும் வகையில் இந்த போர் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று உக்ரைனில் உள்ள கியூ, கார்கிவ், செர்னிவ், மரியூபோல், சுமி ஆகிய நககரங்களில் போர் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.