மாரி சாருக்கு ஒரு கோடி நன்றி – ரஜிஷா விஜயன்..!!

கர்ணன் படத்தில் தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் மாரி செல்வராஜிற்கு நடிகை ரஜிஷா விஜயன் நன்றியை தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த படத்திற்கான இசைவெளியிட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ரஜிஷா விஜயன், மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, யுகபாரதி, யோகி பாபு, நடராஜன் நட்டி, கௌரி கிஷன், போன்ற பலர் கலந்துகொன்டுள்ளார்கள்.
இதில் பேசிய நடிகை ரஜிஷா விஜயன் படத்தில் பணியாற்றியது குறித்து கூறுகையில் ” மிகவும் எமோஷனலான தருணம். கர்ணன் படம் ஒரு பெரிய ஏமோஷனல். இவ்வளவு பெரிய தயாரிப்பு குழுவுடன் தாணு சார் நடிப்பின் லெஜெண்ட் தனுஷ் சார். சந்தோஷ் நாராயணன், யுகபாரதி, யோகி பாபு, நடராஜன் நட்டி, கௌரி கிஷன், இவர்களுடன் இவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த மாரி சாருக்கு ஒரு கோடி நன்றி. அனைவர்க்கும் மிகவும் நன்றி கண்டிப்பாக கர்ணன் திரைப்படத்தை பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025