ஜனவரி 14-ஆம் தேதி நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை கிடையாது – அமைச்சர் செல்லூர் ராஜூ

Default Image

ஜனவரி  14-ஆம் தேதி நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ஜனவரி  7-ம் தேதி  முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ரூ.258 கோடியில் 2.02கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்பு  ஆகும்.

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், பொங்கல் பரிசு தொகுப்பை மக்களுக்கு வழங்கும் வகையில் ஜனவரி  14-ஆம் தேதி நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்