டிக்.. டிக்.. டிக்.. 2019 பிப்ரவரி 1ந் தேதி…..காலை 11:47 மணி…..பூமியை தாக்கும் விண்கல்…!!
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 1ந் தேதி பூமியை விண்கல் ஒன்று தாக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ‘2002 NT7’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கல் சுற்று வட்டப் பாதையில் நோக்கி பயணித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2 கி .மீ பரப்பளவு கொண்ட அந்த விண்கல், ஒரு கண்டத்தை அழிக்கும் வல்லமை கொண்டதாகவும், 30 மில்லியன் அணுகுண்டு சக்தி கொண்டதாகவும் கருதப்படுகிறது. மேலும், பூமியிலிருந்து 38 மில்லியன் மைல்கல் தூரத்தில் அந்த விண்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்கல் தாக்குதல் அச்சம் நம்மிடம் இருந்தாலும், விண்கல் தாக்குதல் பற்றி கவலை பட தேவையில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த விண்கல் பூமியை விட்டு விலகி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள நாசா விஞ்ஞானிகள், அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளது.
மேலும், நாசா தனது ஆபத்து பட்டியலிருந்து, இந்த விண்கல் தாக்குதலை நீக்கியுள்ளது. தொடர்ந்து ‘2002 NT7’ விண்கலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விரைவில் அதன் முழுவிவரம் தெரியவரும் எனவும் நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பூமியை சுழற்சி முறையில் விண்கற்கள் தாக்கியுள்ளதாக கூறிய நாசா விஞ்ஞானிகள், கடைசியாக 1908ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ந் தேதி சைபீரியாவில் உள்ள வனப்பகுதியை விண்கல் ஒன்று தாக்கியதாக கூறியுள்ளனர். இருப்பினும் இந்த ‘2002 NT7’ விண்கல் தாக்குதல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ள நாசா, அதை எதிர்கொள்ள வழிமுறைகள் வகுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.