ஓமைக்ரான் வேகமாக பரவி வருகிறது; எச்சரிக்கை – பிரிட்டன் பிரதமர்!

ஓமைக்ரான் வேகமாக பரவி வருகிறது எச்சரிக்கையாக இருங்கள் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா வகை தற்பொழுது 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், சந்தேகம் எதுவும் வேண்டாம். ஓமைக்ரான் பேரலை வந்து கொண்டிருக்கிறது. ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது.
எனவே நாட்டில் ஐந்தாம் கட்ட கொரோனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1898 பேருக்கு ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளது. பிரிட்டனில் இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
டெல்டா வைரஸை விட ஓமைக்ரான் வேகமாக பரவுகிறது. எனவே மூன்றாவது டோஸ் போடுவது தொடர்பாக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களில் முக கவசம் அணியும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025