OMG!ஒரு நாளைக்கு 70 முறை வாந்தி எடுக்கும் பெண்-இந்த நோய்தான் காரணமா?!
தொடர்ச்சியான வாந்தி, வயிறு வீக்கம், எடை இழப்பு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை காஸ்ட்ரோபரேசிஸ் நோயின் அறிகுறிகள்.
இன்றைய வாழ்க்கை முறையில் கடுமையான நோய்கள் வருவது மிகவும் சகஜமாகிவிட்டது.எனினும்,சில அரிய நோய்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.ஆம்,அப்படிப்பட்ட ஒரு நோய்தான் ‘காஸ்ட்ரோபரேசிஸ்’. இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலைமை குறித்து காண்போம்.
இங்கிலாந்தின் போல்டனில் வசிக்கும் 39 வயதான லீன் வில்லியன் என்ற பெண் ஒருவர் காஸ்ட்ரோபரேசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோயின் காரணமாக,அப்பெண்ணின் உடம்பில் செரிமானம் ஆன உணவு வாந்தி மூலம் வெளியேறுகிறது.இதனால்,அவர் ஒரு நாளில் 70 முறை வாந்தி எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நோய் பற்றி எப்போது தெரியும்?
2008 ஆம் ஆண்டில், லீன் மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்தபோது நோய் இருப்பது கண்டறியப்பட்டது.இதனையடுத்து,லீனுக்கு இரைப்பை இதயமுடுக்கி(gastric pacemaker) பொருத்தப்பட்டு,நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த இதயமுடுக்கி மூலம் வாந்தி மற்றும் குமட்டல் குறைக்கப்பட்டது.
பேஸ்மேக்கர் பேட்டரி தீர்ந்துவிட்டது:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இரைப்பை இதயமுடுக்கியின் பேட்டரி தீர்ந்துவிட்டது, இதன் காரணமாக லீனுக்கு மீண்டும் ஒருமுறை தொடர்ந்து வலியும் வாந்தியும் ஏற்படத் தொடங்கியது.ஆனால்,இதயமுடுக்கிகளுக்கான புதிய பேட்டரி அவருக்கு நேஷனல் ஹெல்த் சர்வீஸ் மையத்தில் கிடைக்கவில்லை.இத்தகைய சூழ்நிலையில், லீன் மீண்டும் ஒரு புதிய காஸ்ட்ரிக் பேஸ்மேக்கருக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுவயதில் இருந்தே உடம்பு சரியில்லை:
சிறுவயதிலிருந்தே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று லீன் கூறினார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்:”குழந்தைகளைப் பெற்ற பிறகும், இந்த நோயைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் எனக்கு காஸ்ட்ரோபரேசிஸ் இருப்பது கண்டறியப்படுவதற்கு முன்பு, நான் மிகவும் வருத்தமாகவும் நோய்வாய்ப்பட்டதாகவும் இருந்தேன்.நான் எதைச் சாப்பிட்டாலும் அல்லது குடித்தாலும், வாந்தி மூலம் வெளியே வந்துவிடும்”,என்று கூறினார்.
வேலையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது:
லீன் தனது நோய் காரணமாக வேலையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக லீன் வீட்டிலேயே முடங்கி உள்ளார். லீனால் இனி தன் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை கூட சந்திக்க முடியாது. அவர் தனது குழந்தைகளுடனோ அல்லது குடும்பத்தினருடனோ நேரத்தை செலவிட முடியாது.லீன் இப்போது ஒரு புதிய பேஸ்மேக்கர் பேட்டரிக்காக க்ரவுட் ஃபண்டிங்(crowdfunding) செய்து வருகிறார்.
காஸ்ட்ரோபரேசிஸ் என்றால் என்ன?
நேஷனல் ஹெல்த் சர்வீஸ் இன் கூற்றுப்படி, காஸ்ட்ரோபரேசிஸ் என்பது வயிற்றை காலியாக்குவதைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் மற்றும் தசைகளின் பிரச்சனையின் விளைவாகும். தொடர்ச்சியான வாந்தி, வயிறு வீக்கம், எடை இழப்பு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.