ஓமைக்ரான் வைரஸ் பரவல் கவலையளிக்கிறது; ஆனால், பயப்பட தேவையில்லை – அதிபர் பைடன்!
ஓமைக்ரான் வைரஸ் பரவல் கவலையளிக்கிறது, ஆனால், பயப்பட தேவையில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது அதிகளவில் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், ஓமைக்ரான் கண்டறியப்பட்டு உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது முதல் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டேன்.
இந்த வைரசுக்கு சிறந்த பாதுகாப்பு முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொள்வது தான். மேலும் ஒரு பூஸ்டர் டோஸும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த கொரோனா வைரஸின் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வைரஸ் கவலை அளிக்கக் கூடிய ஒன்று தான். ஆனால் பீதி அடைய வேண்டியது அல்ல என அவர் மக்களுக்கு தைரியம் தெரிவித்துள்ளார்.